‘நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்’ - நடிகர் சூர்யா

‘நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்’ - நடிகர் சூர்யா

‘நிலச்சரிவினால் உயிரிழந்தவர்களின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்கிறேன்’ - நடிகர் சூர்யா
Published on

கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் பெய்த மழையினால் நிலச்சரிவு ஏற்பட்டு உயிரோடு புதையுண்டு இறந்து போன தமிழர்களுக்கு நடிகர் சூர்யா டிவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்

‘கேரளா, இடுக்கி மாவட்டத்தில் நடந்த நிலச்சரிவு விபத்தில் தமிழகத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்திருப்பது வேதனை அளிக்கிறது. குடும்பத்திற்காகவும், குழந்தைகளின் எதிர்கால நலனுக்காகவும் பிறந்த மண்ணைவிட்டு பிரிந்து சென்று வேலை செய்தவர்கள் உயிருடன் மண்ணில் புதைந்து இறந்து போனது தாங்கமுடியாத துயர நிகழ்வு. நெஞ்சை உலுக்கும் இந்த இயற்கை விபத்தில் உயிரிழந்தவர்களின் துயரத்தில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com