“லெஃப்ட், ரைட், செண்டர் என பாஜகவை தாக்கினேன்” - வைகோ ஆவேசம் 

“லெஃப்ட், ரைட், செண்டர் என பாஜகவை தாக்கினேன்” - வைகோ ஆவேசம் 

“லெஃப்ட், ரைட், செண்டர் என பாஜகவை தாக்கினேன்” - வைகோ ஆவேசம் 
Published on

காங்கிரசை விட பாஜகவைதான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியிருக்கிறேன் என வைகோ தெரிவித்துள்ளார்

காஷ்மீர் விஷயத்தில் முதலில் துரோகம் செய்தது காங்கிரஸ் கட்சிதான் என வைகோ நாடாளுமன்றத்தில் பேசினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி இரண்டு பக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டு கடுமையாக சாடினார். இதனையடுத்து வைகோ - காங்கிரஸ் இடையே வார்த்தைப்போர் தொடர்ந்து வருகிறது. 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த  வைகோ தான் காங்கிரஸை விட பாஜகவைதான் ஆயிரம் மடங்கு அதிகம் தாக்கி பேசியதாக தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், ''என்னுடைய பேச்சில் நான் 30% காங்கிரசை தாக்கி பேசி இருக்கிறேன். 70% பாஜகவை லெஃப்ட், ரைட், செண்டர் என தாக்கி பேசி இருக்கிறேன். பாஜக நெருப்போடு விளையாடுவதாக சொன்னேன். இந்தியா துண்டு துண்டாக போகும் என்றும் சொன்னேன். பொதுவாக்கெடுப்பு நடத்தப்படும் என்று காஷ்மீர் மக்களுக்கு தந்த வாக்குறுதியை நேரு நிறைவேற்றவில்லை. 

காஷ்மீர் பிரச்னையின் வாஜ்பாய் கனவை நிறைவேற்றிவிட்டோம் என பிரதமர் மோடி கூறுவது தவறு. காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370ஐ நீக்க வேண்டும் என வாஜ்பாய் எங்களிடம் சொல்லவில்லை'' எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com