“டில்லியில் 20 ஆண்டுகள்.. இந்தி தெரியாமலே காலம் நன்றாகத்தான் செல்கிறது” - திருச்சி சிவா

“டில்லியில் 20 ஆண்டுகள்.. இந்தி தெரியாமலே காலம் நன்றாகத்தான் செல்கிறது” - திருச்சி சிவா
“டில்லியில் 20 ஆண்டுகள்.. இந்தி தெரியாமலே காலம்  நன்றாகத்தான் செல்கிறது” - திருச்சி சிவா

இந்தி எழுதவும் படிக்கவும் தெரியாத என்னுடைய காலம் 20 ஆண்டுகளாக நன்றாகத்தான் ஓடிக்கொண்டிருக்கிறது என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

திமுக பொதுக்குழு கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கலைஞர் அறிவாலயத்தில் இருந்து 3 மாவட்ட திமுக நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இதில் கலந்துகொண்ட திருச்சி சிவார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் “சோதனைகளை எதிர்கொள்வதில் திமுக தனித்தன்மையோடு இருக்கும். எக்காரணத்தை முன்னிட்டும் அடிப்படை கடமைகளை செய்வதில் திமுக ஒருபோதும் தவறாது என்பதற்கு இந்த காணொலிக் பொதுக்குழுவும் சான்றாக உள்ளது.

வங்கிகளில் பிராந்திய மொழி பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை என்கிற நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் சரிதான். ஆம். அமைச்சர் சொல்லவில்லை. ஆனால், வங்கிகளில் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளின் பயன்பாடு இல்லாமல் இருப்பதை, வங்கிச் சலான் உள்ளிட்ட ஆதாரத்துடன் அனுப்பியுள்ளேன். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் பதில் அனுப்பியுள்ளனர்.

இந்தி படிப்பதால் வளர்ச்சி என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இங்குள்ள பல மொழிகளைப் போல் இந்தியும் ஒரு மொழி. ஆனால் அந்த மொழியை மட்டும் திணித்து, மற்ற மொழிகளை ஆக்கிரமதித்தால் அதை எதிர்க்கும் உரிமை எல்லோருக்கும் உள்ளது. இந்த நாடு பன்முகத்தன்மையும் கூட்டாச்சித் தத்துவமும் கொண்ட நாடு. நான் 20 ஆண்டுகளாக டில்லியில் உள்ளேன். எனக்கு இந்தி எழுதவும் படிக்கவும் தெரியாது. ஆனால் என் காலம் அங்கு நன்றாகத்தான் ஓடிக் கொண்டிருக்கிறது” எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com