”எங்கள் அண்ணாவில் நடித்தபொழுது எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது” - நமீதா பகிர்ந்த நினைவலைகள்!

விஜயகாந்துடன் முதல் படத்திலேயே நடித்த அனுபவங்கள் குறித்து நமீதா பகிர்ந்து கொண்டார்.

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் நேற்று காலை காலமானார். அவருக்கு வயது 71. கட்சித்தொண்டர்கள், ரசிகர்கள், நண்பர்கள், அரசியல் தலைவர்கள் என அனைவரும் இரண்டு நாட்களாக அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், திரைப்பட நடிகை நமீதா விஜயகாந்த் உடன் தன்னுடைய முதல் படத்தில் நடத்த அனுபவங்கள் குறித்து கூறும்பொழுது, ”என்னுடைய முதல் படம் எங்கள் அண்ணா.... அதில் இவர்தான் ஹீரோ எனக்கு தமிழ் அவ்வளவாக வராது என்பதால் நான் அவரிடம் சென்று, ’எனக்கு தமிழ் அவ்வளவாக தெரியாது, மன்னிச்சிடுங்க, ன்னு’ சொன்னேன். அதற்கு விஜயகாந்த், “பரவாயில்லை... நீங்க எத்தனை நேரம் வேண்டுமென்றாலும் எடுத்துக்கோங்க... டயலாக்கை மனப்பாடம் செய்து சொன்னா போதும் அப்படீன்னு சொன்னாரு. அவருக்கு பெரிய ஹீரோன்னு பந்தா இல்ல... ரொம்ப எளிமையா எல்லோரிடமும் பேசி பழகுவார்.” என்று தனது அனுபவத்தை பகிர்ந்துக்கொண்டார்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com