தமிழ்நாடு
பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
பெற்றோருக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு
தனியார் கல்லூரி மாணவி, விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் டி-பார்ம் 4ஆம் ஆண்டு படித்து வருபவர் பவித்ரா (19). தஞ்சாவூரை சேர்ந்த இவர், ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து இரண்டு பெண்களுடன் தங்கி வந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதையடுத்து உடலை கைப்பற்றிய பல்லாவரம் போலீசார், பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இறப்பதற்கு முன்னதாக பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலமாக தன்னால் படிக்க முடியவில்லை, நீங்கள் பணம் கட்டி என்னால் மிகவும் கஷ்டபடுவதாகவும், அதனால் தான் உங்களை விட்டு செல்வதாக குறுந்தகவல் அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.