’திமுகவினரிடம் தவறாக நடந்திருந்தால் மன்னிப்புக்கேட்கிறேன்’: திமுக ஆவடி வேட்பாளர் ஓபன் டாக்
ஆவடி சட்டமன்ற தேர்தலில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனை எதிர்த்து திமுக சார்பில் ஆவடி சா.மு.நாசர் போட்டியிடுகிறார். இதனையொட்டி பட்டாபிராமிலுள்ள தனியார் மண்டபத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகள் மத்தியில் பேசிய வேட்பாளர் சா.மு.நாசர், “ஆவடி தொகுதியில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டால் திமுகவிற்கு பெயர் வந்துவிடும் என்பதால் அமைச்சர் பாண்டியராஜன் இதனை கிடப்பில் வைத்துள்ளார். திமுக வெற்றிபெற்றதும் பாதாள சாக்கடை திட்டம், குடிநீர் இணைப்பு, ஆவடி தொகுதி சீரமைப்பு என பல்வேறு பணிகளை செய்யஉள்ளதாக தெரிவித்தவர் ஆவடி மக்கள் புதிய மாற்றத்திற்கு தயாராக உள்ளனர் எனவே கூட்டணி கட்சியினர் கவனமாக பணியாற்றிட வேண்டும்.
நம்முடைய மெத்தன போக்கினால்தான் முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி உயிரிழந்தார். நான் உள்பட இங்கிருக்கும் அனைவரும்தான் காரணம். இதனை தொடர்ந்து நான் ஏதாவது உங்களை திட்டி இருந்தால் உங்களிடம் கோபமாக நடந்துகொண்ட்டிருந்தால் உங்கள் கால்களை தொட்டு மன்னிப்பு கேட்கிறேன்” என நிர்வாகிகளிடம் மன்னிப்பு கோரினார் இச்சம்பவம் கூட்டத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்தியது.