“என்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுகிறது” - பார் நாகராஜ் பேட்டி

“என்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுகிறது” - பார் நாகராஜ் பேட்டி

“என்னை பற்றி தவறான வதந்தி பரப்பப்படுகிறது” - பார் நாகராஜ் பேட்டி
Published on

சமூக வலைதளங்களில் தன்னை பற்றிய தவறான வதந்தி பரப்பபடுவதாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து பார்‌‌ நாகராஜ் மனு அளித்துள்ளார்.

பாலியல் விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசுவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பொள்ளாச்சியைச் சேர்ந்த பார் நாகராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்த பார் நாகராஜ், பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் தன்னை பற்றி தவறான தகவல் பரப்பப்படுவதால், தனக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தான் தலைமறைவாகவில்லை என்றும், எப்போது அழைத்தாலும் காவல்துறை விசாரணைக்கு ஒத்துழைக்க தயாராக இருப்பதாகவும் பார் நாகராஜ் தெரிவித்துள்ளார்.

இதனிடையே பார் நாகராஜின் பாரை அடித்து நொறுக்கிய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொள்ளாச்சி - ஆழியார் சாலையில் உள்ள நாகராஜின் பார் அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக பொள்ளாச்சியைச் சேர்ந்த சுரேஷ், சதீஷ், மாரிமுத்து, விஜயகுமார் மற்றும் கணேஷ் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com