மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது

மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது

மனைவியை கொலை செய்ய முயற்சித்த கணவர் கைது
Published on

நாமக்கல் அருகே குடும்ப தகராறில் மனைவியை கழுத்து அறுத்து கொலை செய்ய முயன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

நாமக்கல் அடுத்த காவேட்டிபட்டி குப்பம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேல். இவர் அப்பகுதியிலேயே ஸ்டிக்கர் கடை வைத்துள்ளார். இவருக்கும் சுஜிதா என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. ராஜவேலுக்கும், சுஜிதாவுக்கும் குடும்ப பிரச்சனை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் இன்று காலை இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ராஜவேல் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து சுஜிதாவை கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சி செய்துள்ளார். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் சுஜிதாவை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

படுகாயமடைந்த சுஜிதா மேல்சிகிச்சைகாக சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து மனைவியை கொலை செய்ய முயற்சித்த ராஜவேலுவைநாமக்கல் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com