\
மனைவியைக் கொன்று காவலர் தற்கொலை

மனைவியைக் கொன்று காவலர் தற்கொலை

மனைவியைக் கொன்று காவலர் தற்கொலை
Published on: 

மனைவியை வெட்டிக் கொலை செய்த காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பரபரப்பு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.

புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்த நரேஷ், புழல் பகுதியில் வசித்து வந்தார். இவருக்கு, ஜெயஸ்ரீ என்பவருடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்ற நிலையில், வருண் என்ற மகனும் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதியர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 

சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட பிரச்னையால் கோபித்துக் கொண்ட ஜெயஸ்ரீ பெரம்பூரில் உள்ள சகோதரர் சரவணன் வீட்டுக்கு சென்றுவிட்டார்.அங்கு சென்ற நரேஷ், மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்ததாக தெரிகிறது. நேற்று நீண்ட நேரமாகியும் அவர்கள் வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். 

அங்கு வெட்டுக்காயங்களுடன் ஜெயஸ்ரீ உயிரிழந்து கிடந்த நிலையில், நரேஷ் தூக்கில் தொங்கியபடி கிடந்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com