திருவாரூரில் வரதட்சணை கேட்டு பெண்ணை அரிவாளால் வெட்டி, எரிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் வாசன் நகரை சேர்ந்த தம்பதியினர் கிஷோர்-ஜெயநந்தினி. இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகளான நிலையில், ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் ரூ.10 லட்சம் வரதட்சணை கேட்டு ஜெயநந்தினியை அவரது மாமியார் ராணி, மாமனார் ராஜ், நாத்தனார் சத்யா, சத்யாவின் கணவர் சீனிவாசன் மற்றும் கிஷோர் ஆகியோர் அரிவாளால் வெட்டியதாக கூறப்படுகிறது.
அத்துடன் ஜெயநந்தினியை மண்ணெண்ணை ஊற்றி கொளுத்த முயன்றதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது அங்கிருந்து தப்பித்த ஜெயநந்தினியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஜெயநந்தினி சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.