போதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்

போதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்

போதை பழக்கத்தால் காதல் மனைவியை கொலை செய்த கணவர்
Published on

திருப்பூர் அருகே காதல் மனைவியை குத்திக் கொலை செய்த கணவர் தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ஊத்துக்குளியைச் சேர்ந்த நிசார் என்பவர் தனது முதல் மனைவியை பிரிந்து அசினா என்பவரை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நெடுநேரமாக வீட்டில் இருந்து இருவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த உறவினர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளேசென்று பார்த்தனர். 

அப்போது கத்திக்குத்து காயங்களுடன் அசினா உயிரிழந்து கிடந்தார். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் உயிருக்கு போராடிய நிசார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போதை பழக்கத்தால் ஏற்பட்ட பிரச்னையால் மனைவியை நிசார் குத்திக் கொலை செய்ததாகவும், அதே கத்தியால் தானும் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com