14 வருடங்கள் வாழ்ந்த மனைவியை விட்டு பிரிய மனமில்லாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட கணவர்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை அடுத்த ஈஞ்சம்பாக்கத்தில் வசித்து வந்த ஆறுமுகம்(43) என்பவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு ஜெயலட்சுமி(30) என்ற மனைவியும், இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். கடந்த 21ம் தேதி அன்று இவரது மனைவி சொந்த ஊரான மதுரையில் குடும்ப பிரச்சனை காரணமாக மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து இறந்து விட்டார்.
நேற்று மதுரையில் இறுதிச்சடங்கு நடந்து முடிந்தன. அதில் கணவர் ஆறுமுகம் கலந்து கொண்டு சென்னை திரும்பினார். அதன்பின்னர் வீட்டில் மனைவியின் புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது அக்கா வந்து பார்த்த போது தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து அவரை மீட்டனர். போலீசார் உடலை கைப்பற்றி ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நீலாங்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.