மீன் குழம்பு வைத்த மனைவியை கம்பியால் தாக்கிய கணவர் தற்கொலை

மீன் குழம்பு வைத்த மனைவியை கம்பியால் தாக்கிய கணவர் தற்கொலை
மீன் குழம்பு வைத்த மனைவியை கம்பியால் தாக்கிய கணவர் தற்கொலை

ஆடி கிருத்திகை நாளில் மீன் குழம்பு வைத்த மனைவியை இரும்புக் கம்பியால் தாக்கிய பெயிண்டர், மனைவி இறந்துவிட்டதாக நினைத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரட்டுர் அக்ரஹாரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் குமார். பெயிண்டராக வேலை பார்த்து வரும் இவருடைய மனைவி துர்கா. வீட்டு வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு மோகன் மற்றும் ஜீவா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் குமார் தனது வேலையை முடித்துக்கொண்டு நேற்று இரவு குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது குமாருக்கு மனைவி துர்கா மீன் குழம்புடன் சாதம் பரிமாறியுள்ளார்.

அப்போது குமார் தனது மனைவியிடம் இன்று ஆடி கிருத்திகை நாளாக இருந்தும் ஏன் மீன் குழம்பு வைத்தாய் என்றுகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில், மகன்கள் இருவரும் அருகில் உள்ள துர்காவின் சகோதரி வீட்டிற்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் இருவரும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளனர்.

அப்போது தங்களது தந்தை சடலமாக தூக்கில் தொங்கிய நிலையிலும், தாய் தலையில் பலத்த காயங்களுடன் மயங்கிய நிலையில் கிடந்ததையும் பார்த்து அதிர்ச்சி அடைந்த மகன்கள் கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு அங்கு வந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அங்கு விரைந்து வந்த போலீசார் சடலமாக தொங்கிக் கொண்டிருந்த குமாரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே.எம்.சி. அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலையில் படுகாயத்துடன் கிடந்த துர்காவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் போலீசார் தொடர்ந்து விசாரணைநடத்தினர்.

விசாரணையில் மீன் குழம்பு வைத்தது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரம் அடைந்த குமார் மனைவி துர்காவை அருகில் கிடந்த கம்பியால் தலையில் ஓங்கி அடித்ததாகவும், அதில் மயக்கமடைந்து கீழே விழுந்த அவரை இறந்துவிட்டதாக நினைத்து பயந்துபோன குமார், தனது வேஷ்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.

மீன்குழம்பு வைப்பதில் ஏற்பட்ட தகராறில் பெயிண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.

சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com