வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய கணவர்

வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய கணவர்

வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கி மனைவியின் பிறந்தநாளை கொண்டாடிய கணவர்
Published on

புதுக்கோட்டையில் மனைவியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையில் கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றோருக்கு அரிசி காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை கணவர் வழங்கினார்.

புதுக்கோட்டை கீழ நான்காம் வீதியில் தனியார் பள்ளி நடத்தி வரும் கருப்பையா என்பவர் அவரது மனைவி கவிதாவின் பிறந்தநாள் அன்று பல ஆண்டுகளாக பல்வேறு நபர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறார்.

அதன்படி அவரது மனைவி கவிதாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் கொரோனா வைரஸ் தொற்றால் வாழ்வாதாரம் இழந்து மிகவும் சிரமப்பட்டு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிவுற்றவருக்கு உதவி செய்யும் வகையில் அரிசி பருப்பு காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வழங்கி அவரது மனைவியின் பிறந்தநாளை கொண்டாடியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com