\
மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..!

மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்திய கொடூர கணவன்..!
Published on

சென்னையில் மனைவியை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியக் கணவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகர், 5வது பிரதான சாலையில் வசித்து வருபவர் ராஜன் (எ) துண்டு பீடி ராஜன். இவரது மனைவி பஞ்சவர்ணம் (38). இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியை ராஜன் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. தீயில் எரிந்து அலறி துடித்த பஞ்சவர்ணத்தை அப்பகுதி மக்கள் மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது. அவர் 45% தீக்காயத்துடன் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேஜிஸ்திரேட்டிடம் பஞ்சவர்ணம் அளித்த வாக்குமூலத்தில், தனது கணவனே தன் மீது உள்ள ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டால் தீவைத்து கொளுத்தியதாக கூறியுள்ளார். அதனடிப்படையில் ஆதம்பாக்கம் போலீசார் ராஜனை கைது செய்தனர். மேலும், அவர் மீது 307 பிரிவின் கீழ் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com