\
கொடைக்கானலில் விபத்துக்கு காரணமாக இருந்த தடுப்புச் சுவர் அகற்றம்

கொடைக்கானலில் விபத்துக்கு காரணமாக இருந்த தடுப்புச் சுவர் அகற்றம்

கொடைக்கானலில் விபத்துக்கு காரணமாக இருந்த தடுப்புச் சுவர் அகற்றம்
Published on

கொடைக்கானல் மலைப்பாதையில் விபத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த தடுப்புச் சுவர், புதிய தலைமுறை செய்தி் எதிரொலியால் அகற்றப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப் பாதையில், பெருமாள்மலை அடிவாரத்தில் சாலையை அகலப்படுத்தும் பணியின்போது ஒரு தடுப்புச் சுவர் மட்டும் அகற்றப்படாமல் இருந்தது. அதனால் அவ்வழியாகச் செல்லும் வாகனங்கள் தடுப்புச் சுவரில் மோதி விபத்து ஏற்படுவதாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பாக புதியதலைமுறையில் செய்தி வெளியானது. அதையடுத்து, நெடுஞ்சாலைத்துறையினர் அந்தத் தடுப்புச் சுவரை அகற்றினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com