"பசி, பட்டியோடு இருக்கோம் காப்பாத்துங்க" – வேலைக்காக குவைத் சென்றவர்களின் அதிர்ச்சி வீடியோ

"பசி, பட்டியோடு இருக்கோம் காப்பாத்துங்க" – வேலைக்காக குவைத் சென்றவர்களின் அதிர்ச்சி வீடியோ
"பசி, பட்டியோடு இருக்கோம் காப்பாத்துங்க" – வேலைக்காக குவைத் சென்றவர்களின் அதிர்ச்சி வீடியோ

குவைத் நாட்டிற்கு சென்ற அரியலூரைச் சேர்ந்த 3 பேருக்கு அங்கு வேலை கொடுக்காமல் அறையில் அடைத்துவைத்துள்ளதாக அவர்களின் உறவினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.

அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஸ்தினாபுரம் கிராமத்தை சேர்ந்த கலையரசன், தத்தனூர் கிராமத்தை சேர்ந்த இளவரசன் , நல்லநாயக்கபுரம் கிராமத்தை சேர்ந்த அசோக். பெரம்பலூர் மாவட்டம் வேப்பூரில் உள்ள ஆர்.கே டிராவல்ஸ் கருணாநிதி என்பவர் மூலம் இவர்கள் மூவரும் குவைத்தில் கம்பிகட்டு வேலைக்கு 24 மாதம் வேலை என கூறியதின் பேரில் கடந்த செப் 12 ஆம் தேதி சென்றுள்ளனர்.

இந்நிலையில், 3 மாதம் விசிட்டிங் விஷா அதனையடுத்து 24 மாதம் விஷா என சம்பளம் மாதம் 40 ஆயிரம் என ஏஜெண்டுகள் கூறியுள்ளனர். இதனை நம்பி தலா ஒரு லட்சத்து 30 ஆயிரம் கட்டிவிட்டு 3 பேரும் குவைத் நாட்டிக்கு வேலைக்காக சென்றுள்ளனர். அவர்கள் சென்று ஒருமாதத்தில் விசிட்டர் விஷா முடிவடைந்தது‌. இதனையடுத்து சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் தவித்து வருதிகின்றனர்.

அவர்களுக்கு வேலை கொடுக்காமல் ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. தங்களின் நிலை குறித்து குவைத் நாட்டிலிருந்து வீடியோ எடுத்து அனுப்பியுள்ள அவர்கள், தாங்கள் இங்கு உணவு கிடைக்காமல் பசியும் பட்டினியுமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்களை உடனடியாக தமிழ்நாட்டிக்கு மீட்டு வர வேண்டும் என அவர்களின் தந்தை, மாமனார், மனைவி உள்ளிட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதியை சந்தித்து மனு வழங்கினர். உறவினர்கள்,குவைத் நாட்டிலிருந்து அவர்க ளைஅழைத்துவருவதுடன்,கட்டிய பணத்தை திரும்ப பெற்றுத்தரும்படியும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com