ஜனநாயகத்திற்கு நேர்ந்திருக்கிற தலைகுனிவு.. தொல்.திருமாவளவன்

ஜனநாயகத்திற்கு நேர்ந்திருக்கிற தலைகுனிவு.. தொல்.திருமாவளவன்

ஜனநாயகத்திற்கு நேர்ந்திருக்கிற தலைகுனிவு.. தொல்.திருமாவளவன்
Published on

எதிர்க்கட்சி உறுப்பினர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது ஜனநாயகத்திற்கு நேர்திருக்கிற அவமதிப்பு, தலைகுனிவு என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதிய தலைமுறைக்கு பேட்டியளித்த அவர், ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர்‌ வாய்ப்பு அளிக்காததால் தான் விரும்பத் தகாத நிகழ்வுகள் நடந்திருப்பதாக தெரிவித்தார். பெரும்பான்மை இருக்கும் போது ரகசிய வாக்கெடுப்புக்கு சபாநாயகர் வாய்ப்பளித்திருக்க வேண்டும் எனவும் கூறினார்.

சட்டப்பேரவையில் நடைபெற்றுள்ள நிகழ்வுகள் ஜனநாயகத்தை கொச்சைப்படுத்தும் சம்பவமாக அமைந்திருப்பதாக கூறிய அவர், வலுக்கட்டாயமாக எதிர்க்கட்சி உறுப்பினர்களை வெளியேற்றி நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தியது ஜனநாயகத்திற்கு நேர்திருக்கிற அவமதிப்பு, தலைகுனிவு எனவும் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com