வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்கலாம்: மனித உரிமை ஆணையம்
சென்னை வன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என நீதிபதி மஞ்சுளா தெரிவித்துள்ளார். ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடந்த மெரினாவில் நீதிபதி மஞ்சுளா, நீதிபதி கோபிநாத், ஏடிஜிபி அம்ரீஷ் பூஜாரி ஆகியோர் அடங்கிய தமிழ்நாடு மனித உரிமை ஆணைய குழு ஆய்வு செய்தது.
இக்குழுவினர் குழுவினர் காவல்துறை உயர் அதிகாரிகளிடம் தடியடி மற்றும் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையர் சங்கர், மற்றொரு கூடுதல் ஆணையர் சேஷஷாயி, மயிலாப்பூர் துணை ஆணைர் பாலகிருஷ்ணன், காவல்துறை உதவி ஆணையர்கள் பங்கேற்று விளக்கம் அளித்தனர். இது தொடர்பான அறிக்கை தமிழக அரசிடம் விரைவில் சமர்பிக்கப்படும் என மனித உரிமை ஆணைய குழு தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதம் கடந்த ஒரு வாரகாலம் தொடர் போராட்டம் நடைபெற்றது. இதையத்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் சட்டம் ஏற்றுப்பட்ட நிலையில், நேற்று போராட்டம் கைவிடப்பட்டது. அப்போது சென்னையில் சில இடங்களில் வன்முறை ஏற்பட்டது. இதில் போராட்டக்காரர்களில் 63பேர் காயமடைந்தனர். 140 இடங்களில் சாலை மறியல் நடந்தது. 76 பேர் கைது செய்யப்பட்டனர். 108 பேருந்துகளும், 57 போலீஸ் வாகனங்களும் சேதம் அடைந்ததாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், போராட்ட குழுவில் சமூக விரோதிகள் நுழைய முயற்சி செய்ததாக சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜ் கூறினார்.
சென்னையில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர், டிஜிபி ஆகியோர் 2 வாரத்தில் பதிலளிக்க தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து போராட்டம் நடந்த மெரினாவில் மஞ்சுளா தலைமையிலான தமிழ்நாடு மனித உரிமை ஆணைய குழு ஆய்வு செய்தது.