குப்பை வண்டியில் எடுத்துச்செல்லப்பட்ட முதியவரின் உடல்!
வேலூரில் முதியவரின் சடலத்தை குப்பை வண்டியில் எடுத்துச்சென்ற விவகாரத்தை மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
சோளிங்கர் பஜார் தெருவைச் சேர்ந்த 70 வயது முதியவரான ராஜாராம், சாலையோரம் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்டு பிரோத பரிசோதனைக்கு பின்னர், பேரூராட்சி நிர்வாகத்திடம் காவல்துறையினர் ஒப்படைத்தனர். ஆனால், உடலை மயானத்திற்கு எடுத்துச்செல்ல பேரூராட்சி நிர்வாகத்திடம் அமரர் ஊர்தி இல்லாததால், குப்பை வண்டியில் வைத்து முதியவரின் உடலை ஊழியர்கள் எடுத்துச்சென்றனர்.
இதுகுறித்த செய்தி வெளியான நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர், பேரூராட்சி இயக்குநர், ஊரக சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் 4 வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.