`அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களை நியமியுங்கள்’- மனித உரிமை ஆணையம்

`அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களை நியமியுங்கள்’- மனித உரிமை ஆணையம்
`அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்களை நியமியுங்கள்’- மனித உரிமை ஆணையம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுபவம் வாய்ந்த மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமென தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்த கிரிஜா என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பிரசவத்திற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அப்போது அவரிடம் `அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே குழந்தை பிரசவிக்க வாய்ப்புள்ளது’ என மருத்துவர்கள் கூறியதை அடுத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டு அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கிரிஜாவின் தாயார் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் அளித்த புகாரில், மருத்துவர்களின் அலட்சியம் காரணமாகவே தனது மகள் இறந்ததாகவும், மகள் இறந்த நிலையில் பேரக்குழந்தையை வளர்க்க கஷ்டப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை விசாரித்த ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன், இறந்த பெண்ணின் குடும்பத்திற்கு இழப்பீடாக 5 லட்சம் ரூபாயை நான்கு வார காலத்திற்குள் அரசு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு மருத்துவர்கள் நியமிக்கப்படுவதையும் அவர்கள் 24 மணி நேரமும் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும் அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com