ரவுடி என்கவுன்டர் விவகாரம் - தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 

ரவுடி என்கவுன்டர் விவகாரம் - தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 
ரவுடி என்கவுன்டர் விவகாரம் - தமிழக அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் 

சென்னை கொரட்டூரில் விழுப்புரத்தைச் சேர்ந்த ரவுடி மணிகண்டன் என்கவுன்டர் மூலம் கொல்லப்பட்டது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா குயிலாப்பளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி மணிகண்டன், சென்னை கொரட்டூர் பகுதியில் பதுங்கியிருப்பதாக விழுப்புரம் காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சென்னை வந்த விழுப்புரம் காவல்துறையினர், மணிகண்டன் தங்கியிருந்த வீட்டிற்கு சென்ற போது, அவர் தன் கையில் வைத்திருந்த கத்தியால் உதவி ஆய்வாளர் பிரபு என்பவருடைய தலையில் தாக்கியுள்ளார். இதைடுத்து உடனிருந்த உதவி ஆய்வாளார் பிரகாஷ் தன்னிடமிருந்த துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டதில் மணிகண்டன் இறந்தார். 

இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து பத்திரிகைகளில் வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய தலைவர் நீதிபதி மீனாகுமாரி, தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார்.

இதுசம்பந்தமாக நான்கு வாரங்களில் விரிவான அறிக்கையை தாக்கல் செய்யும்படி தமிழக பொதுத் துறையின், சட்டம் – ஒழுங்கு பிரிவு செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, என்கவுன்டர் தொடர்பாக விசாரணை நடத்தி நான்கு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யும்படி, மனித உரிமை ஆணையத்தின் விசாரணைப் பிரிவு டி.ஜி.பி.,க்கும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com