\
மனித முக மாதிரியில் முக அமைப்பு: புதுக்கோட்டையில் அரிய வகை ஆந்தை!

மனித முக மாதிரியில் முக அமைப்பு: புதுக்கோட்டையில் அரிய வகை ஆந்தை!

மனித முக மாதிரியில் முக அமைப்பு: புதுக்கோட்டையில் அரிய வகை ஆந்தை!
Published on

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே மனித முகம் மாதிரியான அமைப்புக் கொண்ட ஆந்தை ஒன்று பறந்து செல்லமுடியாமல் குடியிருப்பு பகுதியில் தஞ்சமடைந்தது.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ளது வளவம்பட்டி கிராமம். அங்கு இன்று காலை மனித முகம் மாதிரியான முக அமைப்புக் கொண்ட அரிய வகை ஆந்தை ஒன்று பறந்து செல்ல முடியாமல் தவறி விழுந்தது. நீண்ட நேரம் பறந்து செல்ல முடியாமல் அப்பகுதியில் தவித்த அந்த அரியவகை ஆந்தையை மீட்ட அப்பகுதி மக்கள் இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.


மனித முகம் மாதிரியான முக அமைப்புக் கொண்ட ஆந்தையை பொதுமக்கள் அதனை கூட்டம் கூட்டமாக வந்து ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் உடல் நலக்குறைவால் இந்த அரியவகை ஆந்தை பறக்க முடியாமல் குடியிருப்பு பகுதியில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் இதனை வனத்துறையினர் மீட்டு உரிய பரிசோதனை மேற்கொண்டு வனப்பகுதியில் கொண்டு சென்று விட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com