ஃபேஸ்புக்கை வைத்து ஐபோன் திருடனை கண்டு பிடித்த கில்லாடி சென்னை இளைஞர்கள்

ஃபேஸ்புக்கை வைத்து ஐபோன் திருடனை கண்டு பிடித்த கில்லாடி சென்னை இளைஞர்கள்

ஃபேஸ்புக்கை வைத்து ஐபோன் திருடனை கண்டு பிடித்த கில்லாடி சென்னை இளைஞர்கள்
Published on

சமூக வலைத்தளத்தை வைத்து இளசுகள் பாழா போறாங்க என்பது பெரியவர்களின் குற்றச்சாட்டு. ஆனால் அதை வைத்து அநேக சாதனைகளை படைக்கலாம் என்று எடுத்துக்காட்டி இருக்கிறார்கள் இரண்டு சென்னை இளைஞர்கள். அப்படி என்னதாங்க சாதிச்சாங்க என்கிறீர்களா? விலை உயர்ந்த போனை தொலைத்துவிட்டு அழுதுக் கொண்டு நிற்காமல் ஒரு புலானாய்வு புலியாக மாறி திருடனை தேடிப் பிடித்திருக்கிறார்கள். அது சாதனை இல்லையா? 

சென்னையை சேர்ந்தவர் சிமியோன். அவருடையை சிம் கார்டை அவர் தொலைத்துவிடுகிறார். உடனே புதிய சிம் கார்ட்டை வாங்க புரசைவாக்கத்திலுள்ள ஏர்டெல் ஷோரூமுக்கு போய் இருக்கிறார். அங்கே சிம்மை வாங்கிக் கொண்டு வெளியே வந்த போதுதான் தெரிந்தது காஸ்ட்லியான ஐஃபோனை காணவில்லை என்பது. உடனே உள்ளே போய் கடைக்காரர்களை கேட்டிருக்கிறார். அவர்கள் கீழே கிடக்கிறதா என அலசி பார்க்க சொல்லியிருக்கிறார்கள். அவர் ஒரு இடம் விடாமல் தேடி பார்த்திருக்கிறார். ஆனால் கிடைக்கவில்லை. உடனே அவர் உள்ளே நுழையும் போது தட்டிவிட்டு போன நபர் அவருக்கு சந்தேகம் வந்துள்ளது. அந்த சந்தேகத்தை அடிப்படையாக வைத்து சிசிடிவி காட்சிகளை போட்டுக்காட்ட சொல்லி இருக்கிறார் சிமியோன். அவர்களும் போட்டுக் காட்டி இருக்கிறார்கள். போனை எடுத்தவரை கண்டுப்பிடித்துவிட்டார். 

ஆனால் ஆள் எஸ்கேப் ஆகிவிட்டாரே என்ன செய்வது? உடனே வந்து போனவர்கள் சம்பந்தமான நம்பர் ஏதாவது உள்ளதா என ஷோரூம் நபர்களை விசாரித்து இருக்கிறார். அவர்கள் கொடுத்த நம்பரை ட்ரூ காலரில் போட்டு தேடி இருக்கிறார். அந்த சிம் பீகாரில் உள்ளது என தெரிய வந்துள்ளது. அதே நம்பரை வைத்து பேஸ்புக்கில் துழாவிய போது போனை சுட்டவர் அக்கெளண்ட் கிடைத்துவிட்டது. சிசிடிவி புட்டேஜில் உள்ள முகமும் ஃபேஸ்புக் முகமும் பொருந்திப்போய் உள்ளது. உடனே அவரது நண்பர்களை தொடர்பு கொண்டு நம்பரை கேட்டிருக்கிறார்கள். அவர்கள் யாரும் கொடுக்கவில்லை. வடநாட்டு மொழியில் பேசி பிறகு ‘எங்க நண்பர் ஒருவருக்கு ஆலோசகராக இருந்தார். ஆனால் அவர் எங்க இருக்கிறார்’ என்று சொன்னதும் நம்பர் கிடைத்துவிட்டது. இத்தனை விஷயங்களையும் சிமியோன் தனியாக செய்யவில்லை. அவரது நண்பர் ஜாஃபரும் உடன் உதவி இருக்கிறார். அவருடைய புலனாய்வு மூலையும் இதில் கலந்துள்ளது. அவர்தான் ஃபேஸ்புக் வழியாக திருடனை கண்டுப்பிடித்துள்ளார். அவர் மாதவரம் வாட்டர் டேங் பகுதியில் உள்ளது தெரியவர போய் காத்திருந்தனர். ஆனால் திருடனை பார்க்க முடியவில்லை. அடுத்த நாள் காலையிலேயே போய் காத்திருந்துள்ளனர். திட்டமிட்ட படி அந்த ஆளையும் பிடித்து விசாரித்துள்ளனர். கடைசியாக போன் கைக்கு கிடைத்துவிட்டது. 

ஏதோ போன் காணாமல் போய்விட்டது. சரி விட்டுவிடுவோம் என்று இல்லாமல் ஒரு போலீஸ் அதிகாரியை போல மாறி துப்பறிந்து திருடனை பிடித்துள்ளனர் சென்னையை சேர்ந்த இந்த இரண்டு இளைஞர்கள். அதற்கு சமூக ஊடகம் உதவிகரமாக இருந்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com