tamilnadu pongal jallikattu competition plan to hold it in 400 places
ஜல்லிக்கட்டுfile

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க எப்படி முன்பதிவு செய்வது? எப்போது வரை அவகாசம்? வெளியான விவரம்!

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Published on

மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று தொடங்குகிறது. அவனியாபுரம் கிராமத்தில் வருகிற 14ஆம் தேதியும், பாலமேட்டில் 15ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 16ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

பாலமேடு ஜல்லிக்கட்டு
பாலமேடு ஜல்லிக்கட்டு புதிய தலைமுறை

இதில் கலந்து கொள்ளவுள்ள மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளின் உரிமையாளர்கள், https://madurai.nic.in/jallikattu/ இணையதளம் மூலம் தங்களது பெயர்களை இன்று மாலை 5 மணி முதல் நாளை மாலை 5 மணி வரை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

tamilnadu pongal jallikattu competition plan to hold it in 400 places
முதல்வர் நிகழ்ச்சியில் கருப்பு நிற துப்பட்டாக்களை வாங்கி வைத்தது ஏன்? காவல்துறை விளக்கம்!

மூன்று கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டில் ஏதேனும் ஒன்றில் மட்டுமே காளைகள் பங்கேற்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளையுடன் உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com