புதிய ரூபாய் நோட்டிலும் கள்ள நோட்டு: வேறுபாடு அறிவது எப்படி?

புதிய ரூபாய் நோட்டிலும் கள்ள நோட்டு: வேறுபாடு அறிவது எப்படி?

புதிய ரூபாய் நோட்டிலும் கள்ள நோட்டு: வேறுபாடு அறிவது எப்படி?
Published on

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்குவதற்காக கள்ள நோட்டுக்களை மாற்றியவர் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டுகளை அளித்த பிரதீவ் ராஜ் என்பவரிடம் காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் சென்னை சவுகார் பேட்டையை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. அவரிடமிருந்த 7 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.‌

இந்நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டிற்கும் நல்ல நோட்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன? என்பது குறித்து தெரிந்து கொள்வோம்

# பறிமுதல் செய்யப்பட்ட கள்ளநோட்டின் தாள் மிகவும் தடிமனாக இருக்கிறது.

# பறிமுதல் செய்யப்பட்டுள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், 500 ரூபாய் நோட்டுக்களில் சீரியல் எண்கள் ஒரே மாதிரியாக இல்லாமல் வரிசை மாறி இருக்கிறது.

# ரூபாய் நோட்டில் உள்ள 2000, 500 ‌எழுத்துகள் மினுங்கும் தன்மை கள்ள நோட்டில் இல்லை.

# இதை போல ரூபாய் நோட்டின் நடுப்பகுதியிலும் மினுங்கும் தன்மை கள்ள நோட்டில் இல்லை.

# 2000, 500 ரூபாய் நோட்டில் வலது புறத்தில் உள்ள காலியான பகுதியை உற்று நோக்கினால் காந்தி படம் மற்றும் ரூபாயின் மதிப்பு சிறிய அளவிலான தெரியும். ஆனால் கள்ளநோட்டில் அது பச்சை கலரில் தடிமனாக தெரிகிறது.

கள்ளநோட்டை தடுப்பதற்காகவே மத்திய அரசு பணமதிப்பிழப்பை கொண்டு வந்து புதிய 2,000, 500 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்தது. ஆனால் அந்த புதிய நோட்டுக்களை கள்ளநோட்டுக்களாக தயாரித்து புழக்கத்தில் விட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை அளிக்கிறது

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com