டீயில் கலந்திருக்கும் ரசாயனத்தை கண்டுபிடிப்பது எப்படி?

டீயில் கலந்திருக்கும் ரசாயனத்தை கண்டுபிடிப்பது எப்படி?
டீயில் கலந்திருக்கும் ரசாயனத்தை கண்டுபிடிப்பது எப்படி?

டீ இல்லாமல் பலருக்கு காலைப்பொழுதுகள் விடிவதே இல்லை. அதிலும் வெளியே அதிக வேலை இருப்பவர்களுக்கு டீதான் உந்துசக்தியாக இருக்கிறது. அப்படிப்பட்ட டீயில் கலப்படம் அதிகரித்து வருவது கவலைக்குரியது என்கிறார்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். டீயிலுள்ள கலப்படத்தை கண்டுபிடிப்பது எப்படி? 

அடிக்கடி டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள், குறைந்த விலையில் கிடைக்கும் டீக்கடைகளை அதிகம் நாடுவர். ஆனால், குடிக்கும் டீயின் சுவையை விட அதன் தரத்தை பார்ப்பது மிகவும் முக்கியம் என்கிறார்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள். நிறம் அடர்வாக தெரிவதற்காக சாயமேற்றும் ரசாயனத்தை கலப்பதாக அவர்கள் எச்சரிக்கிறார்கள். நல்ல டீத்தூளை எப்படி கண்டுபிடிப்பது? என்று கேட்பவர்களுக்கு எளிதாக கண்டுபிடிக்கலாம் என்கிறார்கள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள்.

இதுபோன்ற சாயமேற்றப்பட்ட டீயை குடிப்பவர்களுக்கு வயிற்று வலி போன்ற தொல்லைகள் ஏற்படும் என்று கூறும் அதிகாரிகள், தொடர்ந்து போலி டீத்தூள் கலந்த டீயை குடித்தால் புற்றுநோய் போன்ற ஆபத்துகள் ஏற்படும் என்று எச்சரிக்கிறார்கள். மேலும், டீயை பிளாஸ்டிக் கப்புகளிலும், பிளாஸ்டிக் கவர்களிலும் வாங்கி குடிப்பது புதிய நோய் ஆபத்துகளுக்கான வழியாகும் என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

இதுபோன்று உணவு கலப்படங்கள் குறித்து தகவல்களை தெரிவிக்க தமிழகம் முழுவதும் 9444042322 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அல்லது தொலைபேசி எண்ணிலோ, தகவல்களை அனுப்பலாம் என்கிறார்கள் உணவுப் பாதுகாப்புத்துறையினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com