இடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?: சில விழிப்புணர்வு தகவல்கள்!

இடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?: சில விழிப்புணர்வு தகவல்கள்!
இடி, மின்னல் தாக்குதலில் சிக்காமல் தப்பிப்பது எப்படி?: சில விழிப்புணர்வு தகவல்கள்!

தமிழகத்தில் பருவமழை தொடங்குவதற்கு முன்பே, இந்தாண்டு இடி, மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகவுள்ளது. இந்தநிலையில், இடி, மின்னல் தாக்குதலிலிருந்து எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்து பார்க்கலாம்.

இடியின் போது இரண்டு காதுகளையும் அழுத்தமாக கைகளைக் கொண்டு மூடுவதால், அதீத ஒலியால் ஏற்படும் அதிர்வை உடல் உணராமல் குறைக்கலாம். 

திடீரென ரோமங்கள் சிலிர்ப்பது, உடற்கூச்சம் ஏற்படுவது மின்னல் தாக்குவதற்கான அறிகுறி‌யாகும். அதனை உணர்ந்த உடன் உடலை வளைத்து, தரையில் அமர்ந்து கொள்வது சிறந்தது. 

தங்களால் எவ்வளவு முடியும் அந்தளவிற்கு தரையோடு, தரையாக குனிந்து அமர்ந்துக்கொள்ளுவது,‌ மின்னலின் தாக்குதலில் இருந்து காக்கும். ஆனால், தரையோடு, தரையாக படுத்துக்கொள்ளக் கூடாது. ஏனெனில், முதலில் மின்னல் தரையை தாக்கிய பிறகே, மனிதர்களின் உடலில் அதன் தாக்க‌‌ம் ஊடுருவும்.

முடிந்தவரை ‌தரையோடு நேரடி தொடர்பு குறை‌வாக இருக்க‌ம் வகையில், குதிக்கால்கள் தரையில் படாமல் குனிந்து அமர்வதே மிக சிறந்த தற்காப்பு முறையாகும். 

கால்‌கள் ஒன்றோடு , ஒன்று இடிக்காதவண்ணம் அமர வேண்டும். ஒருவேளை இடி,மின்னலின் போது நீங்க மரங்கள் அடர்ந்த‌, ‌வனம் போன்ற பகுதியில் சிக்கியிருந்தால் உயரம் குறைந்து, அடர்த்தியாக பரவி வளர்ந்திருக்கும் செடிகளை கூடாரமாக பயன்படுத்தலாம். 

திறந்தவெளியில் இருக்கும்போது உயரமான இடத்தைக் காட்டிலும் தாழ்வான இடத்தில் இருப்பதே பாதுகாப்பானது. கட்டத்திற்கு‌வெளியே இருப்பதைக் காட்டிலும் உள்ளே இருப்பதே சிறந்தது.

இடி,மின்னலின் போது நிச்சயம் ஆறு,குளம் போன்ற நீர்நிலைகளில் இருக்கக் கூடாது. மேலும், கொடிக்கம்பம், ஆண்டனா போன்றவற்றுக்கு அருகே இருக்கக்கூடாது. 

குதிரையேற்றம், இருசக்கரவாகன பயணம், மொட்டை மாடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும். பாதுகாப்பற்ற கூடாரங்களில் தங்கக்கூடாது. மரங்களுக்கு கீழ் நிற்கக்கூடாது. 

மின்சாரத்தால் இயங்கக்கூடியவையான ஹேர் டிரையர், மின்சார பல்துலக்கிகள் மற்றும் மின் சாதன பொருட்கள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இருத்தல் வேண்டும். 

மின்னல் ஏற்படும் போது கைபேசி,தொலைபேசியினை உபயோகப்படுத்தாமல் இருத்தல் நல்லது 

உயர் அழுத்த மின் தடங்கள்,இரும்பு பாலங்கள்,செல்போன் கோபுரங்ளுக்கு அடியில் நிற்பதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். போதிய விழிப்புணர்வோடு இருப்பதே மழைக்காலங்களில் இடி,மின்னல் தாக்குதலில் இருந்து காக்கும்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com