திருமாவளவன் பேச்சு எப்படி குற்றமாகும் ? ப.சிதம்பரம் கேள்வி !

திருமாவளவன் பேச்சு எப்படி குற்றமாகும் ? ப.சிதம்பரம் கேள்வி !

திருமாவளவன் பேச்சு எப்படி குற்றமாகும் ? ப.சிதம்பரம் கேள்வி !
Published on

திருமாவளவன் பேசிய பொருள் ஏற்புடையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துகள் இருக்கலாம். ஆனால் அது எப்படி குற்றம் ஆகும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெண்கள் குறித்து சமூக வலைத்தளத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அவதூறாகவும், சர்ச்சை குறித்த கருத்துக்களை பேசியதாகவும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் பாஜகவைச் சேர்ந்த அஷ்வத்தாமன் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் திருமாவளவன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார். அதில் "திருமாவளவன் ஆற்றிய உரை (குற்றவியல்) குற்றம் என்று காவல் துறை வழக்கு பதிவு செய்திருக்கிறது பேசிய பொருள் ஏற்படையதா இல்லையா என்பது பற்றி இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். ஆனால் அது எப்படி (குற்றவியல்) குற்றம் ஆகும் ?

மேலும் "பேச்சுக்கு சுதந்திரம் உண்டு என்பதை நாள் தோறும் நினைவு படுத்த வேண்டுமா? இது போன்ற கருத்துக்களைத் தந்தை பெரியார் பேசினார். இன்று அவர் பேசியிருந்தால் காவல் துறை என்ன செய்திருப்பார்கள்?" என ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com