தீபாவளிக்கு மது விற்பனை இலக்கு எவ்வளவு?  உயர்நீதிமன்றம் கேள்வி

தீபாவளிக்கு மது விற்பனை இலக்கு எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி

தீபாவளிக்கு மது விற்பனை இலக்கு எவ்வளவு? உயர்நீதிமன்றம் கேள்வி
Published on

தீபாவளி பண்டிகைக்கு எவ்வளவு மது விற்பனை செய்ய தமிழக அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர். 
மது எதிர்ப்பு போராட்டக்காரர்களுக்கு ஜாமீன் வழங்கிய விவகாரத்தில் நீதிமன்றத்துக்கும் சிறைத்துறைக்கும் இடையிலான தகவல் தொடர்பு குறித்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன், பார்த்திபன் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது. அப்போது, கருத்துத்தெரிவித்த நீதிபதிகள், ’மாதம் இவ்வளவு மதுபானம் விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தீபாவளி பண்டிகை வருகிறது. இந்த பண்டிகையின்போது மது எவ்வளவு விற்பனை செய்யவேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? மாதம் தோறும் இலக்கு நிர்ணயித்து தமிழக அரசு மது விற்பனை செய்வது வேதனை அளிக்கிறது என நீதிபதிகள் தெரிவித்தனர். .
அதற்கு பதிலளித்த  தலைமை குற்றவியல் வழக்கறிஞர், ‘அவ்வாறு இலக்கு நிர்ணயம் செய்து தமிழகத்தில் மது விற்பனை நடைபெறவில்லை’ எனத் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com