ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!

ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!
ஐயூஎம்எல் 3, மமக 2 - திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு கையெழுத்து!

திமுக கூட்டணியில் ஐயூஎம்எல், மமகவுடன் தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ள நிலையில், எத்தனை தொகுதிகள் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து கூறுகையில், ’’கலைஞர் காலத்திலிருந்தே தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சி திமுக கூட்டணியில் கையெழுத்திடுவது வழக்கம். அதை பின்பற்றும் வகையில் இன்று நானும், திமுக தலைவர் முக ஸ்டாலினும் கையெழுத்திட்டுள்ளோம்.

ஐயூஎம்எல் கட்சிக்கு 5 தொகுதிகள் ஒதுக்கவேண்டும் என்று கேட்டிருந்தோம். சில நெருக்கடிகளால் தரமுடியாத சூழ்நிலை உள்ளதாக அவர் கூறவே, 3 தொகுதிகள் ஒதுக்குவதற்கு ஒப்பந்த கையெழுத்திட்டுள்ளோம். தற்போது தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து மாநிலங்களிலும் போட்டியிடுவதால் எங்களுடைய தனிச்சின்னமான ஏணிச் சின்னத்தில்தான் போட்டியிட உள்ளோம்’’ என்று கூறினார். திமுக கூட்டணி சார்பில் கையெழுத்தாகும் முதல் கட்சி இது.

அவரைத் தொடர்ந்து பேசிய மனிதநேய மக்கள் கட்சியில் தலைவர் ஜவஹருல்லா, ‘’இந்தத் தேர்தலில் நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களில் பாஜக அரங்கேற்றி வரும் பல்வேறு மோசமான நடவடிக்கைகளை கவனத்தில்கொண்டு, திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமரவேண்டும்.

திமுக கூட்டணியில் அதிக கட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் நாட்டுமக்களை கவனத்தில் கொண்டு தியாக மனப்பான்மையுடன் இயங்கக்கூடிய மனிதநேய கட்சி திமுக தலைவருடன் தொகுதி பங்கீடு உடன்பாடு செய்திருக்கிறோம். எங்கள் கட்சி 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து அடுத்தகட்ட பேச்சுவார்த்தையில் முடிவுசெய்யப்படும்’’ என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com