"பிரதமர் மௌனகுருவா? விஸ்வகுருவா?" - குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி

விஷ்வகுரு என மார்தட்டிக்கொள்ளும் பிரதமர் மவுனகுருவாக இருப்பது ஏன்? முதலமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடிPT

பிரதமர் மோடி விஸ்வகுருவா அல்லது மௌனகுருவா?

கன்னியாகுமரியில் மீனவர்கள் குறித்து நேற்று பிரதமர் மோடி பேசியதற்கு பதிலடி கொடுக்கக்கூடிய வகையில் முதலமைச்சர் தனது எக்ஸ் தளம் வாயிலாக பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

’கடந்தகாலத்தில் திமுக செய்த பாவத்தால்தான் இலங்கை அரசால் தமிழ்நாட்டு மீனவர்கள் இன்னலுக்கு ஆளாகின்றனர்’ என்ற பிரதமரின் பேச்சுக்கு பதிலளித்த முதல்வர், “திமுகவின் கடும் எதிர்ப்பை மீறிதான், கட்சத்தீவு இலங்கைக்கு தாரைவார்க்கப்பட்டது.

நாட்டின் ஒரு பகுதியை மாநில அரசால் மத்திய அரசின் அனுமதி இல்லாமல் எப்படி கொடுக்கமுடியும் ? கட்சத்தீவை மீட்க கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com