\
chennai rain
chennai rainpt desk

சுரங்கப்பாதைகளில் நிரம்பிய தண்ணீர்.. தற்போதைய நிலை என்ன?

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து தடைபட்டது. இந்நிலையில், மழை குறைந்ததை அடுத்து எந்தெந்த சுரங்கப்பாதைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது எங்கெங்கு வடிந்துள்ளது என்ற தகவல்களை பார்க்கலாம்.
Published on

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையில் பல சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கியிருந்தது. இதனால் கடந்த சில தினங்களாக அங்கெல்லாம் போக்குவரத்து தடைபட்டது. மழை குறைந்ததை அடுத்து சென்னையில் 13 சுரங்கப்பாதைகளில் மழைநீர் வடிந்துவிட்டது. அதனால் அங்கெல்லாம் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

இன்னும் வியாசர்பாடி, கணேசபுரம், மேட்லி, துரைசாமி, வில்லிவாக்கம் உள்ளிட்ட சுரங்கப் பாதைகளில் நீர் தேங்கியுள்ளது; மொத்தமுள்ள 22 சுரங்கப்பாதைகளில் 13-ல் வெள்ளநீர் வடிந்து வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 9 இடங்களில் மழைநீர் வடியாததால், அங்கு போக்குவரத்து அனுமதிக்கப்படுவில்லை

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com