சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் மோன்தா புயல்..? எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்க கடலில் நிலவும் "மோன்தா" புயல் கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 27ஆம் தேதியான இன்று காலை 5.30 மணி அளவில் மத்திய மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்காள விரிகுடாவின் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் மையம் கொண்டுள்ளது.
சென்னை (தமிழ்நாடு) க்கு கிழக்கு-தென்கிழக்கில் சுமார் 560 கி.மீ., காக்கிநாடா (ஆந்திரப் பிரதேசம்) க்கு தெற்கு-தென்கிழக்கில் 620 கி.மீ., விசாகப்பட்டினம் (ஆந்திரப் பிரதேசம்) க்கு தெற்கு-தென்கிழக்கில் 650 கி.மீ., கோபால்பூருக்கு (ஒடிசா) தெற்கே 790 கி.மீ. மற்றும் போர்ட் பிளேருக்கு (அந்தமான் & நிக்கோபார் தீவுகள்) மேற்கே 810 கி.மீ. தூரத்தில் உள்ளது.
இது அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்காள விரிகுடாவில் வடமேற்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து அக்டோபர் 28 ஆம் தேதி காலைக்குள் தீவிர புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது.
வடக்கு-வடமேற்கு நோக்கி மேலும் நகர்ந்து, அக்டோபர் 28 ஆம் தேதி மாலை/இரவு நேரத்தில் காக்கிநாடாவைச் சுற்றியுள்ள மச்சிலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடக்கும் வாய்ப்பு அதிகம். அதிகபட்சமாக மணிக்கு 90-100 கி.மீ. வேகத்தில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது.. இது குறித்து ஹேமசந்தரிடம் பேசினோம்..
கடல்சார் அலைவுகள் பரவலான மழைப்பொழிவுக்கு சாதகமானதாக இல்லை. எல் நினோ (El Niño) லா நினா (La Niña) போன்றவற்றை வகைப்படுத்த உதவுவது ENSO சுழற்சி. பசுபிக் பெருங்கடலில் இருக்கும் வெப்பநிலையை கணக்கிட்டு குறிப்பிட்ட ஆண்டில் எல்நினோவா அல்லது லாநினாவா என்பதை வகைப்படுத்துவோம். தற்போதைய வடகிழக்கு பருவமழை காலத்தில் இது லாநினாவாக இருக்கிறது. இப்படி லாநினாவாக இருந்தால் இயல்பை விட சற்று அதிகமாகவே ப்பதால் பரவலான மழைப்பொழிவாக இல்லாமல் சிறு சிறு காற்று சுழற்சிகளாக உருவாகி மேகவெடிப்புக்கு சாதகமாக அமைகிறது.

