ஒப்பனாகாத ஏர்பேக்.. சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது எப்படி?

பூந்தமல்லியில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இரண்டு வாகனங்களுக்கு இடையில் சிக்கியவர் அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார்.
Car accident
Car accidentpt desk

செய்தியாளர் ஆவடி நவீன்குமார்

சென்னை மாநகராட்சி மேயராக இருப்பவர் பிரியா. நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் முக்கிய பொறுப்பில் உள்ள இவர், வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்திற்கு சென்று விட்டு காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து கீழே இறங்கியபோது முன்னாள் சென்ற கார் மீது மேயரின் கார் மோதி நின்றது.

chennai mayor car accident
chennai mayor car accidentpt desk

இந்நிலையில் மேயர் காரின் பின்னால் வேகமாக வந்த லாரி, மேயர் பிரியாவின் காரின் பின்பகுதியில் மோதி நின்றது. இதில் மேயர் பிரியாவின் காரின் முன் மற்றும் பின் பகுதி நொறுங்கி சேதமடைந்தது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மேயர் பிரியாவை காரில் இருந்து மீட்டனர். விபத்துக்குள்ளான காரில் அடுத்தடுத்து இரண்டு வாகனங்களில் மோதியும் ஏர்பேக் ஒப்பனாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com