டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி ? - வழிமுறைகள் என்ன

டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி ? - வழிமுறைகள் என்ன

டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி ? - வழிமுறைகள் என்ன
Published on

டெங்கு காய்ச்சலால் சென்னை மாதவரத்தைச் சேர்ந்த இரட்டைக் குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 7 வயது நிரம்பிய இரட்டைக் குழந்தைகளான தீக்‌ஷா, தக்‌ஷன் ஆகியோர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 4 நாட்களுக்கு முன் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். சிகிச்சை பலனின்றி தக்‌ஷன் நேற்றிரவு உயிரிழந்தார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் சிறுமி தீக்சா இன்று காலை உயிரிழந்தார். டெங்கு காய்ச்சலுக்கு இரட்டையர்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் டெங்கு காய்ச்சல் பரவாமல் இருக்க எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநர் அரசர் சீராளர் விளக்களித்துள்ளார். 

டெங்குவில் இருந்து தப்பிப்பது எப்படி?

  • 'ஏடிஸ்' என்ற கொசு மூலம் டெங்கு காய்ச்சல் பரவுகிறது.
  • நல்ல தண்ணீரில் 'ஏடிஸ்' கொசு உற்பத்தியாகிறது.
  • வீடு உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
  • காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
  • குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
  • தொடர்ந்து காய்ச்சல் இருக்கும் குழந்தைகளுக்கு விடுமுறை அளிக்க பள்ளி நிர்வாகம் முன்வரவேண்டும்.
  • டெங்கு காய்ச்சலை தடுக்க பள்ளியின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது.
  • பாரசிட்டமால் மருந்து கொடுக்கலாம்; ஈரத்துணியை வைத்து உடல் வெப்பத்தை குறைக்கலாம்.
  • தொடர்ந்து தலைவலி, உடல்சோர்வு, வயிற்றுவலி, வாந்தி இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
  • 3 நாட்களுக்கு மேல் அபாய அறிகுறிகள் இருந்தால் உடனடியாக ரத்த பரிசோதனை செய்யப்பட வேண்டும்.
  • உடனடியாக மருத்துவமனைக்கு வந்தால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீளலாம்.
  • 5 அல்லது 7 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டால் காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீள்வது சிக்கலாகிவிடும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com