நாகப்பட்டினம் | பட்டாசு வெடித்த பாஜகவினர்... பற்றி எரிந்த வீடு! வீட்டை இழந்து வேதனையில் கதறும் பெண்!

நாகை மாவட்டத்தில் பாஜக வேட்பாளரை வரவேற்பதற்காக தடை செய்யப்பட்ட பட்டாசு வெடிக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் 2 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன.
நாகை - பாஜக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது தீ விபத்த்
நாகை - பாஜக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது தீ விபத்த்புதிய தலைமுறை

தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், தேர்தல் பிரசாரப்பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரம் அடைந்துவருகின்றன. அந்தவகையில், போட்டியிடும் வேட்பாளர்கள் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அப்படி நாகை மாவட்டத்தில் பாஜக வேட்பாளர் ரமேஷூம் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதில் நேற்று (11.04.2024) தேர்தல் பரப்புரை மேற்கொள்வதற்காக நாகை புதிய நம்பியார் நகர் மீனவ கிராம பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார் ரமேஷ்.

நாகப்பட்டினம் பாஜக-வினரால் ஏற்பட்ட பட்டாசு விபத்து
நாகப்பட்டினம் பாஜக-வினரால் ஏற்பட்ட பட்டாசு விபத்து

அப்போது அவருக்கு உற்சாக வரவேற்பு வழங்குவதற்காக பாஜகவினர் பட்டாசு வெடித்துள்ளனர். ஆனால் எதிர்பாரா விதமாக பக்கிரிசாமி என்பவர் வீட்டில் பட்டாசின் தீப்பொறிபட்டு, விபத்து ஏற்பட்டது. பக்கிரிசாமி வீடு மட்டுமன்றி அருகில் இருந்த சுப்பிரமணியம் என்பவரது வீடும் தீயில் கடுமையாக சேதமடைந்தன.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வருவாய் அலுவலர், விபத்து குறித்து விசாரித்தார். அதில் தடை செய்யப்பட்ட இரட்டை சரம் பட்டாசுகளை பாஜகவினர் வெடித்தது அம்பலமானது. உடனடியாக அவர்கள்மீது நாகை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டார் வருவாய் அலுவலர். மேலும் அந்தப் பட்டாசுகளை விற்பனை செய்த கடைக்கும் சீல் வைக்கப்பட்டது.

நாகை - பாஜக வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்தபோது தீ விபத்த்
பழனி | காலை உணவுத்திட்ட பணியாளருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாஜக நிர்வாகி கைது!

இந்த விபத்தில் சேதமடைந்த வீடுகளில் இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமான நிலையில், விபத்து குறித்து பார்வையிட வந்த நாகை மாவட்டத்தின் பாஜக தலைவர் கார்த்திகேயனை அப்பகுதி மக்கள் முற்றுகையிட ஆரம்பித்தனர்.

நாகப்பட்டினம் பாஜக-வினரால் ஏற்பட்ட பட்டாசு விபத்து | வீட்டை இழந்த பெண் வேதனை
நாகப்பட்டினம் பாஜக-வினரால் ஏற்பட்ட பட்டாசு விபத்து | வீட்டை இழந்த பெண் வேதனை

மேலும் , இது குறித்து பாதிக்கப்பட்ட வீட்டின் பெண் ஒருவர் கண்ணீர் மல்க தெரிவிக்கையில், “இங்கே பட்டாசு வெடிக்காதீர்கள். வீட்டின் மேல் பட்டு விட போகிறது என்று நான் தொடக்கத்திலேயே கூறினேன்.

ஆனால், அவர்கள் அதை கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். அடுத்த 5 நிமிடங்கலேயே வீடு முழுவதும் தீப்பிடித்து எரியும் சத்தம் கேட்டது. கதவை திறந்து பார்த்ததில் எல்லாமே எரிந்துவிட்டது” என்றார்.

நாகப்பட்டினம் பாஜக-வினரால் ஏற்பட்ட பட்டாசு விபத்து | வீட்டை இழந்த பெண் வேதனை
நாகப்பட்டினம் பாஜக-வினரால் ஏற்பட்ட பட்டாசு விபத்து | வீட்டை இழந்த பெண் வேதனை

மற்றுமொரு வீட்டில், வீட்டிலிருந்த நகைகளும்கூட உருகியுள்ளதாக அவ்வீட்டுப்பெண் கதறி அழுதது, அங்கிருந்தோரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com