செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?

செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?

செங்கல் இன்றி நீங்கள் விரும்பிய பட்ஜெட்டில் கான்கிரீட் வீடுகள்... அது எப்படி..?
Published on

திருவாரூரில் செங்கல், மணல் பயன்படுத்தப்படாமலேயே வீடுகள் கட்ட மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அது எப்படி? செங்கல், மணல் இல்லாமல் கான்கிரீட் வீடு கட்டப்படுகிறது? என்பதை தெரிந்து கொள்வோம்.

கம்பிகள், சிமெண்ட் உடன் எம் சாண்ட் சேர்த்தால் போதும்...முழுவதுமாக கான்கிரீட்டிலேயே தேவையான வடிவமைப்பில் வீடுகளை கட்டிவிடலாம். செங்கல்லோ, மணலோ தேவையில்லை. திருவாரூர் மற்றும் திருத்துறைப்பூண்டி பகுதிகளில் இந்த கட்டுமான அடிப்படையில் தான் தற்போது வீடுகள் கட்டப்பட்டு வருகின்ற‌ன.

3 யூனிட் கொண்ட ஒரு லோடு மணல் 25 ஆயிரம் ரூபாய்.. ஆயிரம் செங்கற்களின் விலை சுமார் 8 ஆயிரம் ரூபாய்... அதுவும் வீடு கட்ட தொடங்கும்போது இருக்கும் விலை, அதனை கட்டி முடிப்பதற்குள் கிடுகிடுவென உயர்ந்துவிடும். இதனால் நினைத்தபடி வீடு கட்ட முடியாமல் சில சமரசங்களை செய்துகொள்வது வீடு கட்டிப் பார்த்த அனைவருக்கும் உள்ள அனுபவமாகவே இருக்கும். ஆனால், செங்கல், மணல்‌ இன்றி பட்ஜெட்டுக்கு ஏற்ப கான்கிரீட் மட்டுமே அமைத்து வீடுகளை‌ உருவாக்கி வருகிறார் கட்டுமான பொறியாளர் அருண்குமார்.

கட்டடத்தின் அடித்தளம், மேல்தளம், பில்லர் மட்டுமல்லாது சுற்றுச் சுவரும் முழுமையாக கான்கிரீட் மூலமே கட்டப்படுகிறது. இதற்காக ப்ளைவுட் மற்றும் அலுமினியம் பீடிங் மூலம் தாங்கு பலகை தயார் செய்யப்படுகிறது. செங்கல், மணல் மூலம் கட்டப்படும் வீட்டுக்கு ஒரு சதுர மீட்டருக்கு 2 ஆயிரத்து 200 ரூபாய் வரை செலவாகும் நிலையில், கான்கிரீட் வீட்டுக்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு ஆயிரத்து 800 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்படுவதாக கூறுகிறார் வீட்டின் உரிமையாளர்.

மெட்ரோ நகரங்களில் பெரிய பெரிய கட்டுமானங்கள் கான்கிரீட்டை கொண்டே கட்டப்படுவதாகவும், இயற்கை சீற்றங்களிலும் கான்கிரீட் வீடுகள் உறுதித்தன்மையோடு இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com