தொகுப்பு வீடு இடிந்து மூதாட்டி பலி

தொகுப்பு வீடு இடிந்து மூதாட்டி பலி

தொகுப்பு வீடு இடிந்து மூதாட்டி பலி

கனமழை காரணமாக தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே பழைய தொகுப்பு வீடு இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தொடர்மழையால் கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாள் கட்டாநகரம் காலணித் தெருவில் 20 ஆண்டுகள் பழைமையான அரசின் காலணி வீடு இடிந்து தரைமட்டமானது. இதில், ஜெகதாம்பாள் என்ற மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த அரசு அதிகாரிகளை கிராம மக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் பல தொகுப்பு வீடுகள் இடியும் நிலையில் உள்ளதால் அசம்பாவிதத்தைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com