கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 பேருக்கு வீடுகளை வழங்கினார் ரஜினி..!
Published on

கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களில் 10 பேருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் வீடுகள் வழங்கப்பட்டன. 

2018-ம் ஆண்டு நவம்பரில் கஜா புயல் தாண்டவம் ஆடியது. இதில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்பை சந்தித்தன. பல்வேறு தரப்பினரும் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்த உதவியை செய்தனர்.

நாகை மாவட்டம் கோடியக்கரை தலைஞாயிறு கிராமத்தில் கஜா புயல் பாதிப்பு நிவாரணப் பணிகளில் ரஜினி மக்கள் மன்றத்தினர் ஈடுபட்டனர். 

அப்போது வீடுகளை இழந்த 10 பேருக்கு வீடு கட்டித் தர உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி 18 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்கள் 10 பேரையும் சென்னை போயஸ் இல்லத்திற்கு அழைத்து ரஜினிகாந்த் வழங்கினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com