"எச்சில் தொட்டு பார்சல் பேப்பர்களை பிரிக்கக்கூடாது" - நீதிமன்றம் அறிவுரை
உணவகங்கள், பேக்கரிகளில் உணவுப் பொருட்களை பார்சல் செய்யும் போது, பேப்பர்களை பிரிக்க எச்சிலை பயன்படுத்தக் கூடாது என விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
எச்சிலை தொட்டு பார்சல் பேப்பர்களை எடுப்பதாலும், கவர்களை திறக்க ஊதவும் செய்வதால் கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக கூறி, திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, மனுதாரரின் நல் ஆலோசனைக்குப் பாராட்டு தெரிவித்தோடு, உணவக ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சுற்றறிக்கைகளை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்த நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

