சென்னை: நட்சத்திர ஹோட்டல் லிஃப்ட்-ல் சிக்கி உயிரிழந்த ஊழியர்... 3 பேர் மீது வழக்கு!

நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்யும்போது லிஃப்டில் மாட்டிக் கொண்ட பணியாளர் ஒருவர் பலியானார்.
death
deathpt desk

சென்னை மயிலாப்பூரில் உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் பிரபல நட்சத்திர ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் ஹவுஸ் கீப்பிங் பிரிவில் சென்னை பெரம்பூர் ஹதர்கார்டன் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் என்ற இளைஞர் பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று ஹோட்டலின் ஏழாவது மாடியில் உள்ள சர்வீஸ் லிஃப்ட்டில் பொருட்களை ஏற்றிக்கொண்டு 8 வது மாடிக்கு சென்றுள்ளார்.

police case
police casept desk

அப்போது ட்ராலி - லிப்ஃட் இடையே அவரது உடல் ஏழாவது மாடிக்கும் எட்டாவது மாடிக்கும் இடையே சிக்கிக் கொண்டது. இதில், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் அவர்.

இதுகுறித்து தகவல் அறிந்த ராயப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அதில் நட்சத்திர ஹோட்டல் மேலாளர் குமார், லிஃப்ட் பொறுப்பாளர் கோகுல் மற்றும் தலைமை பொறியாளர் வினோத்குமார் ஆகிய மூன்று பேர் மீது அஜாக்கிரதையால் மரணம் ஏற்படுத்துதல் என்ற பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர் காவலர்கள்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com