\
இயேசுராஜ்
இயேசுராஜ்pt web

20 ரூபாய்க் கடனை திருப்பி தராத காவலரின் தந்தை; ஆத்திரத்தில் அடித்து கொலை செய்த ஹோட்டல் உரிமையாளர்!

திருச்சியில் டிபன் கடைக்கு பாக்கி வைத்த 20 ரூபாயைத் தராத, பெண் காவலரின் தந்தையை, கடை உரிமையாளர் அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கொன்னைக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் இயேசுராஜ் (50). இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவரது மூத்த மகள் ஜெயபிரபா காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவரின் டிபன் கடையில் சாப்பிட்டு விட்டு, இயேசுராஜ் 20 ரூபாய் பாக்கி வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்த தொகையை ஜோசப் கேட்டபோது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ஜோசப், கடையில் இருந்த விறகுக்கட்டையால் இயேசுராஜை மண்டையில் அடித்துள்ளார். படுகாயமடைந்த இயேசுராஜ், லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

டிபன் கடை
டிபன் கடை

இது குறித்து லால்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்து தலைமறைவான ஜோசப்பை தேடி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com