மொரட்டு சிங்கிள்களுக்காகவே இயங்கும் ஹோட்டல் - 50% தள்ளுபடி

மொரட்டு சிங்கிள்களுக்காகவே இயங்கும் ஹோட்டல் - 50% தள்ளுபடி

மொரட்டு சிங்கிள்களுக்காகவே இயங்கும் ஹோட்டல் - 50% தள்ளுபடி
Published on

காதல் செட் ஆகாதுன்னு சொல்லும் மொரட்டு சிங்கிள்களுக்காகவே மயிலாடுதுறையில் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.

மொரட்டு சிங்கிள் என்ற ஹேஷ்டேக் தற்போது இளைஞர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. காதலிக்காத இளைஞர்கள் இந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்துகிறார்கள். இதனால் கவரப்பட்டு மயிலாடுதுறையில் இயங்கி வரும் உணவகம்‌ ஒன்று, காதலிக்காத சிங்கிள் இளைஞர்களுக்காக உணவகத்தின் ஒருபகுதியை ஒதுக்கி 50 சதவிகித தள்ளுபடியில் விருந்தளிக்கிறது. ‌அவர்களுக்காகவே ஒருவர் மட்டும் அமரும் வகையில் நாற்காலி, மேசை போடப்பட்டுள்ளது.

இணை யாருமின்றி கவலையுடன் உணவகத்திற்கு வருபவர்கள் அந்த சிங்கிள் சீட்டை பார்த்தவுடன் உற்சாகம் ஆகிவிடுகின்றனர்.

உணவகத்தின் மறுபக்கம் ஸ்மார்ட்போன் கலாச்சாரத்தில் வளரும் 2கே கிட்ஸ் தெரிந்து கொள்ளும் வகையில் அந்தக் காலத்து விளையாட்டுகளான பம்பரம், பச்சை குதிரை, தாயம், கிட்டிபுல்லு, சில்லுக்கோடு, பட்டம் விடுதல், காற்றாடி விடுதல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகள் சுவரில் ஓவியங்களாக வரைந்து வைக்கப்பட்டுள்ளன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com