\
அதிக வெப்பம் உணரும் நகரம் சென்னை

அதிக வெப்பம் உணரும் நகரம் சென்னை

அதிக வெப்பம் உணரும் நகரம் சென்னை
Published on

இந்தியாவிலேயே அதிகம் வெப்பம் உணரும் நகரங்களின் பட்டியலில் சென்னை இரண்டாவது இடத்தில் இருக்கிறது. வர்தா புயலின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கான மரங்களை சென்னை இழந்த சூழலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிகம் வெப்பத்தை உணரக்கூடிய 25 நகரங்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்படுள்ளது. இதில், தென்னிந்தியாவில், பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் உள்ளிட்ட நகரங்கள் இடம்பெற்றாலும், அதிக வெப்பத்தை உணரக்கூடிய நகரமாக சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 7 அடி உயரத்தில் சென்னை மாநகரம் அமைந்துள்ளதால், தமிழகத்தின் பிற நகரங்களை விட சென்னையில் வெப்பம் அதிகமாக இருக்கும் என அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com