ரிவேர்ஸ் பார்க்கும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி : காவலாளி உயிரிழப்பு

ரிவேர்ஸ் பார்க்கும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி : காவலாளி உயிரிழப்பு

ரிவேர்ஸ் பார்க்கும் போது கட்டுப்பாட்டை இழந்த லாரி : காவலாளி உயிரிழப்பு
Published on

KSG HSR LORRY ACCIDENT

ஓசூர் அருகே தனியார் தொழிற்சாலை காவலாளி ஒருவர் லாரியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஓசூர் முக்கண்டப்பள்ளியை சேர்ந்தவர் இராலால். இவர் கடந்த 7 ஆண்டுகளாக சின்ன எலசகிரியில் உள்ள தனியார் ஸ்டீல் தொழிற்சாலையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில் இன்று காலை தொழிற்சாலைக்கு சொந்தமான லாரி ஒன்று பொருட்களை ஏற்றி செல்ல வந்தது. அப்போது இராலால் லாரியை ரிவேர்ஸ் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, லாரியில் பிரேக் பிடிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் லாரியின் முன் சக்கரம் காவலாளி இராலால் மீது ஏறியதில் அவர் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com