உலக நன்மைக்காக மிளகாய் வத்தல் யாகம் - ஏராளமானோர் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் உள்ள பிரத்தியங்கரா தேவி கோயிலில் உலக நன்மை வேண்டி மிளகாய் வத்தல் யாகம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம் அருகேயுள்ள மோரப்பள்ளி கிராமத்தில் அதர்வன மகா பிரத்தியேங்கரா தேவி அம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் முக்கிய விஷேச நாட்களில் மிளகாய் வத்தல் யாகம் நடப்பது வழக்கம். மேலும் பல்வேறு வேண்டுதலுக்காக வத்தல் யாகத்தை நடத்துவார்கள். இந்த நிலையில் தற்போத உலக நன்மை மற்றும் நாட்டில் நல்ல மழை பொழிய வேண்டும் என மிளகாய் வத்தல் கொண்டு மகா யாகம் நடத்தப்பட்டது. மிளகாய் வத்தல்கள் மூட்டை மூட்டையாக கொண்டு வந்து யாக குண்டலத்தில் போட்டப்பட்டு மந்திரங்கள் முழங்க யாக நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தலைமை பூசாரி உட்பட ஏராளமான அர்ச்சகர்கள் பூஜை நடத்தினர். இன்று கன்னடத்தில் ஸ்ராவண மாதம் தமிழில் புரட்டாசி மாதம் வரும் பௌர்ணமி நாள் என்பதால் இந்த நாளில் அம்மனை நினைத்து வேண்டும் வரம் கிடைக்கும் என்பதால் இந்த மகாயாகம் நடத்தப்பட்டது. யாகம் நடைபெற்று கொண்டிருக்கும் போதே ஒசூர் பகுதிகளில் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனைத்தொடர்ந்து பிரத்தியேங்கரா தேவி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த மகா யாக பூஜையில் ஒசூர் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு வழிபட்டு சென்றனர்.