“உங்கள் ரேஷன் கார்டில் 1 கிலோ பருப்பு விநியோகம்” - குறுஞ்செய்தியால் பொதுமக்கள் அதிர்ச்சி
ஓசூர் அருகே ரேஷன் கடையில் கடந்த மாதம் பருப்பு எண்ணெய் ஆகிய பொருள்கள் பொதுமக்களுக்கு வழங்கவில்லை ஆனால் வாங்கியதாக அவர்களுடைய செல்போனுக்கு குறுந்தகவல் வந்துள்ளதாக புகார் தெரிவித்தனர்.
ஜி.மங்கலம் கிராமத்தில் உள்ள நியாய விலைக்கடையில் கடந்த மாதம் பொதுமக்களுக்கு பருப்பு மண்ணெண்ணெய் பொருள்கள் வழங்கவில்லை ஆனால் வழங்கப்பட்டதாக அவர்கள் செல்போனுக்கு குறுந்தகவல்கள் வந்துள்ளன, இதைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து வாங்காத பொருள்களுக்கு எப்படி வாங்கியதாக தகவல்கள் வருகிறது என விற்பனையாளிரிடம் கேட்டதற்கு முறையாக பதில் தரவில்லை. அதிகாரிகள் விற்பனையாளரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர்.
இதுகுறித்து ஓசூர் வட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியை தொடர்பு கொண்டு கேட்டபோது இதுகுறித்து புகார் வந்துள்ளது. இதற்கு தனியாக ஒரு நபரை நியமித்து எத்தனை பேருக்கு இந்த குறுஞ்செய்தி வந்துள்ளது என்று ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணைக்கு பிறகு துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.