\
ஓசூர்: கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி

ஓசூர்: கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி

ஓசூர்: கடும் பனிப்பொழிவால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் அவதி
Published on: 

ஓசூரில் கடும் பனிப்பொழிவு நிழவியதால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கடும் அவதியடைந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், பாகலூர், கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை, தளி, சூளகிரி உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது

இதேபோல் ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. வெள்ளை போர்வை போர்த்தியது போல பனிமூட்டம் காரணமாக சாலை முழுவதும் இரவு நேரத்தை போலவே காட்சியளித்தது. இதையடுத்து அனைத்து வாகன ஓட்டிகளும் வாகன முகப்பு விளக்கை எரியவிட்டபடி ஊர்ந்து சென்றனர்.

மேலும் குடியிருப்பு பகுதிகளில் எதிரே வரும் ஆட்கள் கூட தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடுமையான குளிரை சமாளிக்கும் வகையில் ஸ்வெட்டர், குல்லா அணிந்தபடி பொதுமக்கள் வெளியே நடமாடினர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com