'யானைக்கும் யானைக்கும் சண்டை' - கடைசியில் நடந்த சோகம்!

'யானைக்கும் யானைக்கும் சண்டை' - கடைசியில் நடந்த சோகம்!
'யானைக்கும் யானைக்கும் சண்டை' - கடைசியில் நடந்த சோகம்!

உரிகம் அருகே யானைகளுக்கு இடையே நடந்த சண்டையில் காயமடைந்த பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.

ஓசூர் வனக்கோட்டம் காவேரி தெற்கு வன உயிரின சரணாலயத்தில் உரிகம் வனச்சரகம் உள்ளது. இங்குள்ள வனப்பகுதியில் உன்சேபச்சிகொல்லை சரக பகுதியில் வன ஊழியர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்கு பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது. இது குறித்து வன ஊழியர்கள் ஓசூர் வன கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனிக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து அவருடைய தலைமையில் வனச்சரக அலுவலர் மற்றும் வன ஊழியர்கள் அங்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தர்மபுரி மண்டல வன பாதுகாவலர் பெரியசாமி சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த யானையை பார்வையிட்டார்.

இதைத் தொடர்ந்து ஓசூர் வன கால்நடை உதவி மருத்துவர் பிரகாஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் அங்கேயே யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர். சுமார் 4 மணி நேரம் இந்த பிரேத பரிசோதனை நடந்தது. அதில் யானைக்கு 36 முதல் 38 வயது உடையது என்பதும், யானை உடலின் வெளிப்பகுதியில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. வனப்பகுதியில் யானைகளுக்கு இடையே சண்டை நடந்ததும், இதில் பெண் யானை காயமடைந்து இறந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி கூறுகையில், 'உரிகம் வனச்சரகத்தில் தற்போது 70-க்கும் மேற்பட்ட யானைகள் உள்ளன. இவற்றின் நடமாட்டத்தை வனப் பணியாளர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். காப்புக் காடுகளை விட்டு யானைகள் வெளியே வரும்போது மீண்டும் அவைகளை பாதுகாப்பாக அனுப்பி வைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் வனப் பகுதியை ஒட்டியுள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கிராம மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com